பைசன் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!
பைசன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை போன்ற படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் மாரி செல்வராஜ்.
அதனைத் தொடர்ந்து துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், பசுபதி ,கலையரசன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தப் படத்தை வருகிற மே மாதம் 16ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
