Sanjeev in Bigg Boss Wild Card Entry

பிக் பாஸ் வீட்டுக்குள் தளபதி விஜயின் நண்பர் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sanjeev in Bigg Boss Wild Card Entry : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நாளுக்கு நாள் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் முதல் வாரத்திலேயே உடல்நலக் குறைபாடு மற்றும் பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தானாக வெளியேறினார் திருநங்கை போட்டியாளர் நமிதா மாரிமுத்து.

திருப்பதி ஏழுமலையானுக்கு, 9 டன் மலர்களால் இன்று புஷ்ப யாகம்

இதனையடுத்து நாடியா சாங், அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி ஆகியோர் வெளியேறிய நிலையில் அடுத்ததாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இமான் அண்ணாச்சி வெளியேறலாம் என சொல்லப்பட்டு வருகிறது.

இந்த மழை எப்போ விடும் Sir-னு என்னை கேக்குறாங்க – Shock-ஆன நீயா நானா Gopinath..! | Chennai Rain | HD

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் வெகுவிரைவில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சஞ்சீவ் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பலரும் தளபதி விஜயின் நண்பர் சஞ்சீவா அல்லது ராஜா ராணி சஞ்சீவா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ராதா ராணி சஞ்சீவ் தற்போது தான் புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நிலையில் விஜயின் நண்பன் சஞ்சீவ் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.