Samyuktha After BB Eviction

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சங்கீதா தன் குடும்பத்தாருடன் நேரத்தை செலவழிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Samyukta Photo After BB Eviction : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ரேகா வேல்முருகன் சுரேஷ் சக்ரவர்த்தி சுசித்ரா ஆகியோர் வெளியேறியிருந்த நிலையில் இந்த வாரம் சம்யுக்தா வெளியேற்றப்பட்டார்.

நேரடியாக நாமினேஷன் இருக்கு வராத சமயம் அனிதாவால் நாமினேட் செய்யப்பட்டார். நேற்றைய நிகழ்ச்சியில் அனிதா சோம் ஆகியோர் காப்பாற்றப்பட்ட நிலையில் ஜித்தன் ரமேஷ் மற்றும் சம்யுக்தா மட்டுமே இருந்தனர்.

பெரிய அளவில் சஸ்பென்ஸ் வைக்காமல் சம்யுக்தா வீட்டை விட்டு வெளியேறுவதாக கமல் அறிவித்தார். வீட்டை விட்டு வெளியேறிய அவர் தன் குழந்தைகளுடனும் குடும்பத்தாருடனும் நேரத்தை செலவழித்து வருகிறார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சம்யுக்தா வளர்ப்பு சரியில்லை என பேசியது கமல்ஹாசனுக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாகவே அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் இல்லையென்றால் ஜித்தன் ரமேஷ் தான் வெளியேறி இருப்பார் எனவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.