படையப்பா படத்தை இயக்க கே எஸ் ரவிக்குமார் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ.!!
படையப்பா படத்தை இயக்க கே எஸ் ரவிக்குமார் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கே.எஸ் ரவிக்குமார் இவரது இயக்கத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா , சௌந்தர்யா போன்ற பல பிரபலங்கள் நடிப்பிலும் வெளியான திரைப்படம் படையப்பா.
இந்தத் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்திருந்தது. இந்த திரைப்படத்தை இயக்க கே எஸ் ரவிக்குமார் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இந்த படத்தை இயக்க அவர் 65 லட்சம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த பணத்தில் தான் ஒரு இடத்தை வாங்கி தற்போது பிரம்மாண்ட வீடு கட்டி வாழ்ந்து வருகிறாராம் கே எஸ் ரவிக்குமார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
