ரவிமோகன் பற்றி, சித்தார்த் தெரிவித்த தகவல்..
நடிகர் சித்தார்த் 3 BHK படத்தில் ஹீரோவா நடித்திருக்கிறார். ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள
இப்படம் ஜூலை 4-ம் தேதி வெளியாகிறது. படத்தில் சரத்குமார், தேவயானி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ரவி மோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசும்போது,
‘சித்தார்த் நல்ல கதைகளையே தேர்வு செய்வார். குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இருக்கும். இப்படம் பாலுமகேந்திராவின் ‘வீடு’ படம் போல பேசும்படி அமையும்’ என்றார்.
இதனைத் தொடர்ந்து சித்தார்த் பேசுகையில், எடிட்டர் மோகன் வீட்டில் ரவி எப்படியோ, அப்படித்தான் நானும் அவர்கள் வீட்டில். என்னுடைய வீட்டிலும் ரவி இன்னொரு மகன்தான்.
தெலுங்கில் நான் நடித்த ‘பொம்மரிலு’ திரைப்படத்தின் ரீமேக்கான ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தில் ரவி நடித்தார். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் அந்தப் படத்தில் நடப்பதுபோன்றுதான் ரவியின் வீட்டிலும் நடக்கும்.
நான்தான் ரவியின் கேரக்டரில் நடித்தேன். நானும் ரவியும் ரொம்பவே நெருக்கமான நண்பர்கள். ஒருவரின் வளர்ச்சியில் ஒருவர் உறுதுணையாக இருக்கிறோம். ரவி எப்போதுமே நன்றாக இருக்க வேண்டும்’ என்றார்.
