சாக்ஷி அகர்வால் கழுத்தில் தாலியுடன் மற்றும் திருமண கோலத்தில் உள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Sakshi Agarwal in marriage costume : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

கழுத்தில் தாலியுடன் திருமண கோலத்தில் சாக்ஷி அகர்வால்.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!!!

காலா, விசுவாசம் போன்ற திரைப்படங்களில் துணை வேடங்களிலும் நடித்துள்ளார். இப்படியான நிலையில் சாக்ஷி அகர்வால் தன் புகைப்படங்களை தொடர்ந்து இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டு உள்ளார்.

தற்போது கழுத்தில் தாலியுடன் பட்டுப்புடவையில் திருமணக் கோலத்தில் உள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் விளம்பர நிகழ்ச்சிக்காக எடுத்துள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.