நடிகை சாய் பல்லவி சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் விஜய் தேவர்கொண்ட உடன் நடிக்க மாட்டேன் என்று ஓபனாக பேசியிருக்கிறார். அது தற்போது வைரலாகி உள்ளது.

பிரேமம் என்ற மலையாள படம் மூலம் அறிமுகம் ஆனவர் சாய் பல்லவி. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் பிறந்த இவர் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். தற்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல திரைப்படங்களில் நடித்து திரை உலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவர் நடனத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள்.

விஜய் தேவர்கொண்டவுடன் நடிக்க மாட்டேன்… வைரலாகும் சாய் பல்லவியின் அதிரவைக்கும் பேட்டி!!

இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் விஜய் தேவர்கொண்ட குறித்து சாய்பல்லவி பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அப்பேட்டியில் சாய் பல்லவி நான் பல படங்களில் குடும்பப்பாங்கான கதையையும், பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிப்பேன். ஆனால், விஜய் தேவரகொண்டா கூட நடிக்க மட்டேன் என்று கூறியிருக்கிறார்.

விஜய் தேவர்கொண்டவுடன் நடிக்க மாட்டேன்… வைரலாகும் சாய் பல்லவியின் அதிரவைக்கும் பேட்டி!!

ஏற்கனவே சாய் பல்லவி விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடிக்க இருந்தாராம் ஆனால், அப்படத்தில் அதிக முத்தக் காட்சிகளில் நடிக்க வேண்டியது இருந்ததால் அப்படத்திலிருந்து சாய்பல்லவி விலகி விட்டாராம். அதன் பிறகு தான் அப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளாராம். ஒருவேளை இதுதான் சாய் பல்லவியின் முடிவிற்கு காரணமோ என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது.