கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படத்தின் வில்லன் இவர்தான்..
சூர்யாவுக்கு வில்லனாக வருபவர், அன்று காமெடி நடிகராக வந்து.. இன்று இயக்குனராகவும் இருப்பவர்தான். சரி, விஷயத்திற்கு வருவோம்..
தமிழ்த்திரையில் ஜிகர்தண்டா, பேட்ட போன்ற திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்த கார்த்திக் சுப்பராஜ், தற்போது சூர்யா நடிப்பில் ரெட்ரோ படத்தை இயக்கி வருகிறார்.
படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே வாய் பேச முடியாத பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து 2டி நிறுவனம் மூலம் தயாரித்து வருகின்றனர்.
இந்த படத்தின் டீசர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி, அதில் வரும் ‘சூர்யாவின் லவ் ப்ரபோஸ் சீன்’ வரவேற்பை பெற்றது
இந்த படத்தில் கேங்ஸ்டராக நடித்துள்ளார் சூர்யா. மேலும், பழைய காலகட்ட கெட்டப்பிலும் வருகிறார். சூர்யாவுக்கு எப்படி ‘ரோலக்ஸ்’ கேரக்டர் பேசப்பட்டதோ, அதேபோல் ‘ரெட்ரோ’ கேரக்டரும் பேசப்படும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தற்போது, இப்படத்தின் வில்லனாக வக்கீல் கதாபாத்திரத்தில் வரும் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது.
காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகன், இயக்குனர் என பன்முகத்தன்மையை வெளிப்படுத்தி வரும் ஆர்.ஜே.பாலாஜி இப்போது வில்லன் அவதாரமும் எடுக்கவுள்ளது ‘ரெட்ரோ’ படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா தனது 45-வது படத்திலும் பிஸியாய் நடித்து வருகிறார். இப்படம் மே மாதம் ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.