இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார நடிகை யார் தெரியுமா?
இந்திய சினிமாவில் பெரிய பணக்கார நடிகை மற்றும் அவரது சொத்து குறித்து காண்போம்.
இந்த நடிகையின் கடைசி படம் 2019-ல் வெளியானது. மாடலாக இருந்து நடிகையாக மாறியவர்.
இவர், நடிப்பதை தாண்டி வியாபார உலகில் நுழைந்ததால், இந்தியாவில் மிகப் பெரிய நடிகையாக மாறியிருக்கிறார். ஆம், அவர்தான் பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா.
‘கயாமத் சே கயாமத் தக்’ படத்தில் அமீர் கானுடன் அறிமுகமாகி, பன் கயா, ஜென்டில்மேன், டார், ராம் ஜானே, யெஸ் பாஸ், போல் ராதா போல், இஷ்க், தீவானா மஸ்தானா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களால் ரசிகர்களை கவர்ந்தார்.
ஆகஸ்ட் 2024-ல் வெளியிடப்பட்ட Hurun India Rich List இன் 2024 பதிப்பில், ஜூஹி சாவ்லாவின் சொத்து மதிப்பு ரூ.4600 கோடியாக இருந்தது. இது தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட் அல்லது தீபிகா படுகோனே, கத்ரீனா கைஃப் அல்லது ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நடிகைகளின் சொத்து மதிப்பை விட அதிகம்.
ஜூஹி சாவ்லாவின் வருமானம் பெரும்பாலும் சினிமாவில் இருந்தே வருகிறது. ஆனால், சினிமா தவிர, தனது கணவர் தொழிலதிபர் ஜெய் மேத்தா மற்றும் நண்பர் ஷாருக்கானுடன் இணைந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் இணை உரிமையாளராகவும் உள்ளார்.
ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் சில்லிஸ்’ குழுமத்தின் இணை நிறுவனராகவும் ஜூஹி சாவ்லா இருக்கிறார்.
ஜூஹி சாவ்லா 2023-ம் ஆண்டு நெட்பிளிக்ஸில் வெளியான Friday Night Plan திரைப்படத்தில் நடித்திருந்தார். அதே ஆண்டில் ‘தி ரயில்வே மென்’ என்ற வெப் சீரிஸிலும் நடித்திருந்தார். ஜூஹியின் கடைசி திரை வெளியீடு 2019-ல் ‘ஏக் லட்கி கோ தேகா தோ ஐசா லகா’ படமாகும்.
பிஸ்னஸ் உலகிலும் வலம் வரும் ஜூஹிக்கு, மும்பையில் இரண்டு பிரபல ஹோட்டல்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.