பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மேன் ஆஃப் மாஸஸ் நடிகர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் மிகப்பெரிய படைப்பான “NTRNeel” திரைப்படம், ரசிகர்களிடையே ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கேஜிஎஃப்’, ‘சலார்’ போன்ற மாபெரும் வெற்றி படங்களை இயக்கிய பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் இந்த படம், 2027ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், படக்குழு ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. என்டிஆரின் பிறந்தநாளான மே 20 அன்று “NTRNeel” திரைப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய போஸ்டர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த போஸ்டரில் என்டிஆர் மாஸான மற்றும் ஸ்டைலான தோற்றத்தில் காட்சியளிப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. மே 20 அன்று வெளியாகும் இந்த கிளிம்ப்ஸ், அவரை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு பரிசாக அமையும்.
மேலும், இந்தப் படத்திற்காக என்டிஆர் மேற்கொண்டுள்ள உடல் மாற்றமும் பேசுபொருளாகியுள்ளது. இதுவரை காணாத புதிய லுக்கில் அவர் திரையில் தோன்றவிருப்பதாக கூறப்படுவதால், ரசிகர்கள் அதிக உற்சாகத்தில் உள்ளனர்.
பிரஷாந்த் நீலின் இயக்கத்தில், மிகப்பெரிய அளவில் உருவாகும் இந்த திரைப்படம், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகிறது. என்டிஆர் – பிரஷாந்த் நீல் கூட்டணி, இந்திய சினிமாவில் மிக வலுவான மற்றும் எதிர்பார்க்கப்படும் இணைப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது.
“NTRNeel” திரைப்படம் ஜூன் 11, 2027 அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. காதல், ஆக்ஷன், உணர்ச்சி என அனைத்தையும் இணைக்கும் இந்த படம், ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத திரையரங்கு அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
