Pushpa 2

‘தம் அடிப்பியா, தண்ணி அடிப்பிடியா’ என்று கேட்டார் பாலா: இயக்குனர் மாரிசெல்வராஜ் பெருமிதம்..

இயக்குனர் பாலா குறித்து, மாரி செல்வராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு பற்றிப் பார்ப்போம்..

தமிழ் சினிமாவில் சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி என இயக்கிய படங்களால் இந்திய அளவில் புகழ் பெற்றிருக்கிறார் பாலா.

இவர் இயக்கிய திரைப் படைப்புகளில் பிதாமகன், நான் கடவுள் ஆகியவற்றிற்கு தேசிய விருதை வென்றார். அதேபோல், ‘பரதேசி’ திரைப்படத்தால் அந்தப் படத்தின் ஆடை வடிவமைப்பாளரும் தேசிய விருதினை வென்றார்.

தற்போது அருண் விஜய்யை வைத்து ‘வணங்கான்’ படத்தை முடித்திருக்கிறார். இதனை சுரேஷ் காமாட்சியுடன் சேர்ந்து பாலாவும் தயாரித்திருக்கிறார். இப்படம் வரும் 10-ம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது.

இந்நிலையில், இயக்குனர் பாலாவை சந்தித்த நிகழ்வு குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியதாவது: ‘பரியேறும் பெருமாள் படத்தை பார்த்துவிட்டு பாலா சார் உங்களை பார்க்க விரும்புகிறார் என்று ஃபோன் வந்தது.

அதனையடுத்து, அவரது ஆபீஸுக்கு போனேன். ஒரு பெரிய இருட்டு அறையில் பாலா மட்டும் அமர்ந்திருந்தார். அது எனக்கு பயத்தை கொடுத்தது.

பிறகு உள்ளே போன என்னிடம் ‘தம் அடிப்பியா, தண்ணி அடிப்பியா என்று கேட்டார். இல்லை சார் என்றேன். நல்லது அப்படியே இரு’ என்று சொல்லிவிட்டு ஒரு தங்க செயினை எனது கழுத்தில் போட்டுவிட்டார். பிறகு படம் பற்றி நிறைய பேசினார். அது எனக்கு அவ்வளவு பெருமையாக இருந்தது’ என்றார்.

mari selvaraj open talks about director vanangaan movie bala
mari selvaraj open talks about director vanangaan movie bala