Rishabh Pant Achieved
Rishabh Pant Achieved

Rishabh Pant Achieved – ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிக்காட்டிய இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் புதிய சாதனை படைத்துள்ளார்.

சிட்னி டெஸ்டில் 159 ரன்களை விளாசிய பந்த் இத்தொடரில் மொத்தம் 350 ரன்களை எடுத்தார். இதன் மூலம் ஐசிசி தரவரிசையில் 17-ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

இதே போல் 1973-ஆம் ஆண்டு விக்கெட் கீப்பாராக இருந்த பாரூக் இன்ஜினியர் இதே சாதனையை படைத்து இருந்தார்.

மற்றும், தல தோனி பெற்றிருந்த டெஸ்ட் மதிப்பீடு 662 புள்ளிகளையும் முறியடித்து 673 புள்ளிகளை பெற்று உள்ளார் பந்த்.

தோனி கடந்த 2014-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் அவரில் புள்ளி 662-ஆக இருந்தது.

புஜாரா முன்னேற்றம் : பேஸ்ட்மேன் தரவரிசையில் இந்திய வீரர் புஜாரா மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

மற்றும் ஆல்ரவுண்டர் ஜடேஜா 57-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். மேலும், மயங்க் அகர்வால் 62-ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

பௌலர்களில் குல்தீப் யாதவ் 45-ஆம் இடத்திற்கும், பும்ரா 16, சமி 22, ஜடேஜா 5 என முன்னேற்றம் அடைந்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here