மீண்டும் இணையும் கார்த்திக் சுப்புராஜ் சூர்யா கூட்டணி? வெளியான சூப்பர் அப்டேட்.!

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சூர்யா கூட்டணி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி ஐந்து நாட்களில் உலக அளவில் 83 கொடுக்கும் மேல் வசூல் செய்து வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவுடன் இணைந்து மீண்டும் இன்னொரு படம் பண்ண உள்ளதாக சொல்லி இருக்கிறார்.
அதாவது சூர்யா சாருடன் இன்னொரு படத்தை கண்டிப்பாக பண்ணுவேன் அது மிகப்பெரிய பட்ஜெட் படம் என்றும் நிறைய நேரம் தேவைப்படுவதாகவும் சொல்லி இருக்கிறார். இது மட்டுமில்லாமல் அது என்னுடைய கனவு படம் சூர்யா சார்க்கு கமிட்மெண்ட்ஸ் எல்லாம் இருப்பதால் எப்போது துவங்கும் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
இவர்களது கூட்டணியில் உருவாகி வெளியான ரெட்ரோ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் தற்போது அடுத்த படத்திற்கான அப்டேட் கொடுத்துள்ளதால் இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரிக்கச் செய்துள்ளது.
