Web Ads

விஜயிடம் தெளிவான அரசியல் பார்வை இல்லை.. பிரகாஷ்ராஜ் ஓபன் டாக்..!

விஜயிடம் தெளிவான அரசியல் பார்வை இல்லை என சொல்லியுள்ளார் பிரகாஷ்ராஜ்.

actor prakash raj talk about thalapathy vijay
actor prakash raj talk about thalapathy vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் இருப்பவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.H. வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது இந்த படத்தை தொடர்ந்து விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என அனைவருக்கும் தெரியும்.

இந்த நிலையில் விஜயின் அரசியல் வருகை குறித்து சில நடிகர்களிடம் கேட்பது தற்போது வழக்கமாக வருகிறது. அந்த வகையில் பிரகாஷ்ராஜ் கேட்டபோது அதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.

விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் பிரபலமான இயக்குனர் அவர் தனது மகன் ஸ்டார் ஆவதற்கு முன்பாக நிறைய படங்களை இயக்கியிருக்கிறார் விஜய் அரசியலுக்கு புதியவர் நான் அறிந்த வரையில் நாங்கள் அரசியலைப் பற்றி தீவிரமாக பேசியது கிடையாது அவர் தனக்கு இருக்கும் பிரபலத்தின் காரணமாக அரசியல் வந்திருக்கிறார் அதேபோல் தான் பவன் கல்யான் அவன் தனது கட்சியை துவங்கி பத்து வருடங்கள் தன்னுடைய நிலைப்பாட்டில் தெளிவாக இருந்ததே இல்லை அதேபோல்தான் விஜய் இடமும் அரசியல் குறித்து தெளிவான பார்வை இல்லை என கூறியுள்ளார்.

இது மட்டும் இல்லாமல் விஜய் தேர்தலில் ஒரு சில இடங்களை பெற்றாலும் அதன் பிறகு தன்னை நிரூபிக்க வேண்டும் விஜய் பேசும்போது வசனங்களை கேட்பது போல் நன்றாகத்தான் இருக்கிறது அவருக்கு ஆழமான புரிதல் இல்லை இவரை நம்பியா இந்த நாட்டின் தலை விதியை ஒப்படைப்பது என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor prakash raj talk about thalapathy vijay
actor prakash raj talk about thalapathy vijay