வலிமை படத்துடன் பீஸ்ட் திரைப்படம் போதும் என கூறப்பட்டு வந்த நிலையில் பொங்கல் ரேசில் இருந்து விலகிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Release Update of Beast Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துளசி போல வருமா?

படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக், Glimpse வீடியோ ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படத்துடன் தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படம் போதும் என கூறப்பட்டு வருகிறது.

விமல் மற்றும் தம்பி ராமைய்யா கலந்துகொண்ட Production No.3 பூஜை..! | Vimal | Thambi Ramaiah | Tamil HD

இப்படியான நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி பொங்கல் ரேஸிலிருந்து பீஸ்ட் திரைப்படம் விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது. பீஸ்ட் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிவடைய காலதாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது. மேலும் பொங்கல் ரேஸில் ஏற்கனவே பல திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இதன் காரணமாக இந்த படத்தை கோடை விடுமுறை விருந்தாக ஏப்ரல் 14ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதே தினத்தில்தான் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கே ஜி எஃப் 2 திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.