ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தின் வெளியீட்டுத் தேதி!

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில், தயாரிப்பாளர் சுபாஸ்கரன் வழங்கும், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படம், அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ள லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர் ஜி.கே.எம். தமிழ்குமரன், “’சிக்மா’ திரைப்படத்தை ஜூலை 31ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். படம் மிகச் சிறப்பாக உருவாகியுள்ளது. ரசிகர்களுக்கு இது மறக்க முடியாத திரையரங்கு அனுபவமாக இருக்கும் என நம்புகிறோம். இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தையே மிகுந்த அர்ப்பணிப்புடனும் தெளிவுடனும் உருவாக்கியுள்ளார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் கடின உழைப்பும் படத்தில் பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஜேசன் சஞ்சய் கூறுகையில், “’சிக்மா’ எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படைப்பாகும். என் கதையில் நம்பிக்கை வைத்து முழு ஆதரவு வழங்கிய தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கும், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கும் மனமார்ந்த நன்றி. அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவுடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. ஜூலை 31ஆம் தேதி ரசிகர்கள் படத்தை திரையரங்குகளில் காண ஆவலுடன் காத்திருக்கிறோம். விரைவில் மேலும் பல சுவாரஸ்யமான அப்டேட்கள் வெளியாகும்” என்றார்.
சந்தீப் கிஷனுடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன் மற்றும் யோகி ஜாபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
A high-stakes heist begins. 💵 #SIGMA storms into theatres on July 31st. 🗓️ Gear up for the ultimate quest. 🔥@official_jsj @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @jsjmedia01 @sundeepkishan @MusicThaman @fariaabdullah2 #RajuSundaram #SampathRaj @shivpanditt @follow_anbu… pic.twitter.com/Sd87kylWZN
— Lyca Productions (@LycaProductions) May 29, 2026
தொழில்நுட்பக் குழு:
தயாரிப்பு: லைகா புரொடக்ஷன்ஸ்
வழங்குபவர்: சுபாஸ்கரன்
இயக்கம்: ஜேசன் சஞ்சய்
நாயகன்: சந்தீப் கிஷன்
இசை: தமன் எஸ்
ஒளிப்பதிவு: கிருஷ்ணன் வசந்த்
படத்தொகுப்பு: பிரவீன் கே.எல்
VFX மேற்பார்வை: ஹரிஹரசுதன்
ஆடியோ உரிமம்: சரிகமா
டிஜிட்டல் உரிமம்: நெட்ஃபிலிக்ஸ்
படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் டிரெய்லர் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.