Bala And Gabriella

கேப்ரில்லா மற்றும் பாலாவுக்கும் இடையே காதல் இருக்கா இல்லையா என்பது தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

Relationship Between Bala and Gabriella : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

தற்போதைய நான்காவது சீசன் தொடங்கியதிலிருந்தே படு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பாலா, கேப்ரில்லா இடையே காதல் மலர்ந்தது போன்ற காட்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பாலா கேப்ரில்லாவை தங்கச்சி எனக் கூற அப்படி கூப்பிடாத எனக்கு பிடிக்கல என கூறுகிறார் கேப்ரில்லா.

இதனால் கேப்ரில்லா மனதில் பாலாவின் மீது காதல் இருப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல் பாலாவும் விளையாட்டுக்குத்தான் தங்கச்சி என கூறுகிறார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மேலும் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் கமல்ஹாசன் அனிதாவை கலாய்க்க அதனை கண்டுபிடித்து நீங்க எதிர்பார்த்த மாதிரியான கலாய்க்கிற மாதிரி இருக்கு என பதிலளித்துள்ளார்.

இந்த வார எவிக்ஷனில் இருந்து சுரேஷ் சக்கரவர்த்தி காப்பாற்றப்பட்டு விட்டார் என்பதும் வீடியோ மூலமாக தெரிய வந்துள்ளது.

https://twitter.com/iaziz07/status/1320251322768125952?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.