
ரெட் பிளவர்: உலகளாவிய சினிமாவில் ஒரு புரட்சிகரமான ஒலி அனுபவம்
ரெட்பிளவர், தமிழ் திரைப்பட உலகில் புதிய அத்தியாயம் மிகவும் எதிர் பார்க்கப்பட்ட தமிழ் ஆக்ஷன் திரைப்படம்”ரெட் பிளவர்” தயாரிப்பு பணிகளின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இயக்குநர் ஆண்ட்ரூ பண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், வரலாற்று ரீதியான களத்தை அடிப்படையாகக் கொண்டு, எதிர்கால காலகட்டத்தில் நிகழ்கிறது. ஹீரோ விக்னேஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே. மணிக்கம் தயாரித்துள்ள இப்படம், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அற்புதமான மெய் நிகர் ஒலி அனுபவத்தை வழங்கும்.

இந்த ஒலி அமையப்பக, ஒலிவடிவமைப்பாளர் ரஷித் அமைந்துள்ளார். ஒவ்வொரு ஒலி கூறுகளும் கதையை ஈர்க்கும் வகையில் உருவாகியுள்ளது. இதற்கு மேலும் சிறப்பூட்டும் வகையில், புகழ் பெற்ற சிவக்குமார் இறுதி மிக்ஸிங்கில் தனது நிபுணத்துவத்தை வெளிப் படுத்தியுள்ளார். அதி நவீன டால்பி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, “ரெட்பிளவர்” திரைப்படத்தின் ஒலி வடிவமைப்பு பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில்அமைந்துள்ளது.
தேவாசூர்யா ஒளிப்பதிவு, சந்தோஷ்ராமின் இசை, அரவிந்த்ன் படத்தொகுப்பு, கிராபிக்ஸ் இயக்குனர் பிரபாகரன், கலை இயக்குநர் சான்டீ, ராகுலின் மோஷன் கிராபிக்ஸ், கலரிஸ்ட் பிரான்சிஸ் சேவியர் டிஜிட்டல் கிரேடிங் மற்றும் இடி மின்னல் இளங்கோவின் சண்டைப் பயிற்சி திரைப் படத்திற்கு மேலும் சிறப்பூட்டுகின்றன.
“ரெட் பிளவர்” திரைப்படம். தமிழ் திரைப்படத் துறையின் தொழில் நுட்பத் திறமையை உலகிற்கு வெளிப்படுத்தும் என்ரு இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் கூறினார்.
ரெட்பிளவர் உலக திரைப்பட வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமையும் என முழு படக்குழுவினரும் நம்புகிறார்கள்.