விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவரும் நண்பர்களா? காதலர்களா?

Web Ads

நண்பர்கள் காதலர்களாக இணைவது இயல்பு தானே. அவ்வகையில், இதோ ஒரு நிகழ்வு காண்போம்..

விஜய் தேவரகொண்டாவின் 36-வது பிறந்த நாளான மே 9-ந்தேதி அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க ராஷ்மிகா மந்தனா ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவில், அவர் விஜய்யை எந்தப் பெயரால் அழைக்கிறார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

ராஷ்மிகா தனது இன்ஸ்டாவில், ‘எனக்கு மீண்டும் மிகவும் தாமதமாகி விட்டது. ஆனால், பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜ்ஜு. உங்கள் நாள் அனைத்து வகையான ஆசீர்வாதங்கள், அன்பு, மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வம், அமைதி மற்றும் அனைத்து நல்ல விஷயங்களாலும் நிறைந்திருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்’ என எழுதியுள்ளார்.

அதற்கு விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவின் பதிவை மிகவும் அழகானது என கூறியுள்ளார். அதை ராஷ்மிகா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, ‘மிகவும் அழகானது, உங்கள் அனைத்து விருப்பங்களும் ஆசீர்வாதங்களும் நிறைவேறட்டும்’ என்று எழுதியுள்ளார்.

Web Ad 2

இருவரும் 2018-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படமான ‘கீதா கோவிந்தம்’ படத்தில் முதன்முதலாக இணைந்து நடித்தனர். இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு ‘டியர் காமரேட்’ படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர்.

2018 முதல் இருவரும் காதலிப்பதாகக் கூறப்படுகிறது. இருவரும் வெளியே செல்லும்போது ஒன்றாகக் காணப்படுகின்றனர். விடுமுறையைக் கூட ஒன்றாகக் கழித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால், விஜய்யும் ரஷ்மிகாவும் தங்கள் காதலை உறுதிப்படுத்தவில்லை. ஒருவரையொருவர் நல்ல நண்பர்கள் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில், இருவரும் மீண்டும் வெளிப்படையாக விருப்பங்களை தெரிவித்துள்ளது தற்போது ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

rashmika mandanna wishes vijay deverakonda on his birthday
rashmika mandanna wishes vijay deverakonda on his birthday