Web Ads

நயன்தாரா, அனுஷ்காவை தொடர்ந்து ‘பயங்கர அவதாரம்’ எடுக்கிறார் ராஷ்மிகா

ராஷ்மிகா மந்தனா தற்போது தனது அடுத்த படத்தைப் பற்றிய அப்டேட் சொல்லி வித்தியாசமாக அசத்தியுள்ளார். இது பற்றிப் பார்ப்போம்..

ராஷ்மிகா கதையின் நாயகியாக நடிக்கும் ‘மைசா’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இப்படத்தை ரவீந்திரா புல்லே இயக்கியுள்ளார். இது குறித்து ராஷ்மிகா தனது இன்ஸ்டாவில், ‘மைசா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து,

‘எப்போதும் புதிதாக, வித்தியாசமாக, சுவாரஸ்யமாக ஏதாவது ஒன்றை உங்களுக்கு வழங்க முயற்சிப்பேன். இதுவும் அப்படிப்பட்ட ஒரு முயற்சிதான். இதுவரை நான் ஏற்று நடிக்காத ஒரு கதாபாத்திரம். நான் இதுவரை கால் வைக்காத ஒரு புதிய உலகம்.

இதுவரை நான் சந்திக்காத என்னுடைய புதிய முகம். இது பயங்கரமானது. நான் மிகவும் பதட்டமாகவும், உற்சாகமாகவும் இருக்கிறேன். நாங்கள் என்ன உருவாக்கப் போகிறோம் என்பதை நீங்கள் எப்போது பார்ப்பீர்கள் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன். இது வெறும் ஆரம்பம்தான்’ என பதிவிட்டுள்ளார்.

‘மைசா’ படத்தில் ராஷ்மிகாவின் கம்பீர தோற்றமானது, அனுஷ்கா ஷெட்டியின் தோற்றத்தை நினைவூட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அனுஷ்கா பிறந்தநாளில் அவரது ‘காட்டி’ படத்தின் தோற்றம் வெளியிடப்பட்டது.

ராஷ்மிகாவின் தோற்றமும் அதேபோல் இருப்பதாக ரசிகர்கள் ஒப்பிட்டு வருகின்றனர். அதேபோல் ‘ராக்காயி’ படத்தில் நயன்தாராவும் இதேபோல் ஒரு லுக்கில் இருந்ததையும் ரசிகர்கள் நினைவுகூர்கின்றனர். இருந்தாலும், கதைக்களம் என்ன? திரைக்கதை எப்படி? என பார்ப்போம்.