Web Ads

மீண்டும் இயக்குனர் ஆகிறார் எஸ்.ஜே.சூர்யா; புதிய படம் பற்றி அப்டேட்

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் ‘வாலி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி முத்திரை பதித்தார். பின்னர் விஜய் நடிப்பில் ‘குஷி’ படத்தையும் இயக்கி தொடர் வெற்றி பெற்றார்.

மேலும், தொழில்நுட்ப திறனுடன் ‘நியூ’ என்ற சைன்ஸ் ஃபிக்சன் கதையை எடுத்து அதிலும் வெற்றியும் கண்டார்.இதனைத் தொடர்ந்து ‘அன்பே ஆருயிரே’ படத்தை எடுத்து அசத்தினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘இசை’ என்ற படத்தை இயக்கினார். இசையமைப்பாளரும் இவர்தான்.

பின்னர், இயக்கப் பணியிலிருந்து விலகி முழு நேர நடிகராக தொடர்கிறார். மாநாடு, வீர தீர சூரன் போன்ற படங்கள் உள்பட எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களால் வரவேற்பு பெற்றுள்ளது. ஒவ்வொரு படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தெலுங்கு சினிமாவிலும் ‘சரிபோதா சனிவாரம்’ ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்கள் வெளியாகின.

இதற்கிடையே எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இச்சூழலில், ‘கில்லர்’ என்ற படத்தை தான் இயக்கவிருப்பதாக கூறியிருக்கிறார். அந்தப் படம் குறித்த புதிய அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார்.’கில்லர்’ படத்தை கோகுலம் சினிமா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டு சில புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார். இந்நிகழ்வு அவரது ரசிகர்களால் வைரலாகி தெறிக்கிறது.

s.j.suryah directed film miller update