தளபதி 66 ஷூட்டிங் ஸ்பாட்டில் ராஷ்மிகா மந்தனா வீடியோ ஒன்று இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான டீஸ்ட் திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

தளபதி 66 ஷூட்டிங் ஸ்பாட்டில் ராஷ்மிகா.. முதல் முறையாக இணையத்தில் லீக் ஆன வீடியோ

தமன் இசையமைக்க இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், யோகி பாபு, நடிகர் ஷாம் உட்பட பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

தளபதி 66 ஷூட்டிங் ஸ்பாட்டில் ராஷ்மிகா.. முதல் முறையாக இணையத்தில் லீக் ஆன வீடியோ

மேலும் இந்த படத்தில் குஷ்புவும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் நடிகர் விஜயுடன் குஷ்பு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ராஷ்மிகா மந்தனா, குஷ்பு என இருவரும் இருக்கும் வீடியோ ஒன்று சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்காகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.