விஜய தேவராவுடன் ராஷ்மிகா பிறந்த நாள் கொண்டாட்டம்: வைரலாகும் நிகழ்வு
விஜய் தேவராகொண்டா-ராஷ்மிகா இருவரும் இணைந்து நடித்த படங்கள் வெற்றி பெற்று, ரசிகர்களை கவர்ந்தது. இருவருமே பிஸியாக இருப்பதால், காதலை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். இருப்பினும், டேட்டிங்கில் இருக்கின்றனர்.
இந்நிலையில், ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரொமான்ஸ் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாவில், இருவரும் தங்களது புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்துள்ளனர். அதாவது, ஏப்ரல் 5-ந்தேதி ராஷ்மிகாவின் பிறந்த நாள் என்பதால், இருவரும் வெளிநாட்டிற்குச் சென்று பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் தான் இவை என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
மேலும், ஒரு நாள் முன் பின் என புகைப்படங்களை வெளியிடாமல் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களையே பகிர்ந்திருக்கலாம் எனவும் ஆர்வமுடன் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்தியாவில் தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா ‘அனிமல்’ படத்தின் மூலம் இந்திக்கு சென்றார். அண்மையில் ‘சாவா’ படம் ஹிந்தியில் வெளியானது.
ராஷ்மி, நேஷனல் க்ரஷ்ஷாக உயர்ந்திருக்கிறார். இதேபோல், விஜய் தேவரகொண்டாவும் நடிப்பதுடன் படங்களைத் தயாரித்து வருகிறார். அதனால், காற்றுள்ளபோதே தூற்றிக்கொண்டு, திருமண நிகழ்வை பின்னர் யோசிக்கலாம் என இருவரும் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.