பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது – நடிகர் ஜிதின் குலாட்டி

Web Ads

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். தற்போது அவர் நடிகர் ஜிதின் குலாட்டியுடன் இணைந்து ‘ஃபௌசி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பிரபாஸுடன் சுமார் இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் அனுபவம் குறித்து Variety India-க்கு அளித்த பேட்டியில் பேசிய ஜிதின் குலாட்டி, பிரபாஸின் எளிமை மற்றும் மனிதநேயத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

“பிரபாஸ் மிகவும் இனிமையானவர், தாராளமானவர். யார் உதவி கேட்டாலும் அவர்களுக்கு உதவத் தயாராக இருப்பார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருடன் படப்பிடிப்பில் இருக்கிறேன். அவரைச் சுற்றியுள்ள பலருக்கு அவர் உதவுவதை நேரில் பார்த்து வியந்திருக்கிறேன்” என ஜிதின் தெரிவித்துள்ளார்.

Web Ad 2

மேலும், பிரபாஸ் வீட்டில் சமைக்கப்படும் உணவையும் தான் சாப்பிட்டுள்ளதாகக் கூறிய அவர், குறிப்பாக அங்கு தயாரிக்கப்படும் மட்டன் மிகவும் சிறப்பானது என்றும் தெரிவித்துள்ளார்.

“பிரபாஸ் வீட்டில் சமைத்த உணவை நானும் சாப்பிட்டிருக்கிறேன். குறிப்பாக அங்கு தயாரிக்கப்படும் மட்டன், நான் இதுவரை சாப்பிட்டதிலேயே மிகச் சிறந்தது. இதை நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. அனுபவித்து சொல்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.

பிரபாஸ் மற்றும் ஜிதின் குலாட்டி இணைந்து நடித்து வரும் ‘ஃபௌசி’ படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ‘சலார்’, ‘கல்கி 2898 AD’, ‘தி ராஜா சாப்’ உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் இப்படமும் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.