Ramya Pandian Photos After Laser Treatment

கண் அறுவை சிகிச்சைக்கு பிறகு ஜொலிக்கும் உடையில் ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ramya Pandian Photos After Laser Treatment : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். இவர் திரையுலகில் ஜோக்கர் என்ற படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் ஆண் தேவதை என்ற படத்தில் நடித்தார்.

சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் தொடர்ந்து படங்களில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் இடுப்பு மடிப்பை காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்தார். அதன் பின்னர் விஜய் டிவியில் வாய்ப்புகள் கிடைத்தன.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். தற்போது சூர்யாவின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இவருக்கு கண்ணில் லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது இவர் பளபளவென ஜொலிக்கும் உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.