Ramya Krishnan in Chithi 2

சித்தி 2 சீரியலில் ராதிகாவிற்கு பதிலாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Ramya Krishnan in Chithi 2 : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சித்தி 2. இந்த சீரியலில் ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் சீரியலை விட்டு விலகியதாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த பதிவு சித்தி 2 ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் இந்த சீரியல் நிறுத்தப்படுமா என்றும் பல கேள்விகள் எழுப்பப்பட்டது. இப்படியான நிலையில் ராதிகா நடித்த சாரதா வேடத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சித்தி 2 சீரியலில் ராதிகாவுக்கு பதில் இந்த நடிகை தான் நடிக்க போறாங்களா? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ரம்யா கிருஷ்ணன் தான் சாரதா கதாபாத்திரத்தில் சித்தி 2 சீரியலில் ராதிகாவுக்கு பதிலாக நடிக்கப்போவதாக தகவல் கசிந்துள்ளது.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.