Pushpa 2

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ படம், ரிலீஸ் ஆவதில் சிக்கலா?

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் பிரம்மாண்டமாய் உருவாகி பொங்கல் வெளியீடாக வருமென அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இப்படத்தின் அப்டேட் குறித்து பார்ப்போம்..

‘கேம் சேஞ்சர்’ டீசரை பொறுத்தவரையில், ‘ராம் சரண் பல கெட்டப்புகளில் காட்சி அளிக்கின்றார். இதனால், ராம் சரண் எத்தனை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்ற கேள்வி எழுகின்றது. அதேபோல், இரண்டு கெட்டப்களில் எஸ்.ஜே.சூர்யா வருகின்றார்.

படம் தேர்தல் கால அரசியலை மையப்படுத்திய கதையாக இருக்கும்’ எனவும் இணையதளவாசிகள் பலவாறு கணித்து கருத்து வெளியிட்டனர்.

‘கேம் சேஞ்சர்’ படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். தமன் முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு இசையமைத்து இருக்கிறார்.

இந்நிலையில், படத்தின் வியாபாரம் தற்போது தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்த படத்தின் திரையரங்க விநியோக உரிமை 40 கோடி ரூபாய் என நிர்ணயித்துள்ளார் தயாரிப்பாளர் தில் ராஜு. ஆனால், இந்தியன் 2 தோல்வியால் தமிழகத்தில் ஷங்கர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் நம்பிக்கையில்லை.

அதனால், விநியோகஸ்தர்கள் தயங்க, தற்போது டிஸ்ட்ரிபியூஷன் முறையில் பணமே பெற்றுக்கொள்ளாமல் ரிலீஸ் செய்யப்படுவதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

‘கேம் சேஞ்சர்’ டைட்டில் போல, படம் போட்டியையும் சவாலையும் வென்று வாகை சூடுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.!