Pushpa 2

புயல்போல டிக்கெட் புக்கிங் ஆகிறது புஷ்பாவுக்கு: மெகா வசூல் மழை விவரம்

புஷ்பா பட மெகா வெற்றியை தொடர்ந்து உருவான புஷ்பா 2 திரைப்படம், வரும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது. முன்னதாக, டிக்கெட் புக்கிங்கில் படம் சாதனை படைத்திருக்கிறது. இது குறித்த தகவல் காண்போம்..

புஷ்பா-2 படம் ரிலீஸாக 10 நாட்கள் உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே வெளிநாடுகளில் டிக்கெட், புயலாய் புக்கிங் ஆகி வருகிறது. ‘இதுவரை இந்திய சினிமாவில் எந்தவொரு படமும் செய்யாத அளவுக்கு ஓவர்சீஸ் வசூலை புஷ்பா 2 அள்ளும்’ என கூறுகின்றனர்.

புஷ்பா முதல் பாகம் தமிழ், இந்தி ரசிகர்களையும் கவர்ந்த நிலையில், ரூ.500 கோடி அளவுக்கு வசூலை அள்ளி ‘பான் இந்தியா’ வெற்றிப் படமாக மாறியது.

இந்நிலையில், ரூ.500 கோடி பட்ஜெட்டில் புஷ்பா 2 படத்தை உருவாக்கி உள்ளனர். ரூ.1000 கோடி வசூலை டார்கெட் செய்தே படக்குழு அனைத்து வேலைகளையும் பார்த்து வருகின்றனர்.

புஷ்பா படத்தின் பாடல்கள் மற்றும் டீசர், டிரெய்லர் என அனைத்துக்குமே ஒரு பெரிய ஹைப் உருவாகி வருகிறது. இதுவரை அமெரிக்காவில் 1.4 மில்லியன் டாலர்கள் வசூலை சுமார் 50 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு நிகழ்த்தியிருப்பதாக கூறுகின்றனர். இந்திய மதிப்பில் சுமார் 12 கோடி ரூபாயை 10 நாட்களுக்கு முன்னதாகவே ப்ரீமியர் காட்சிக்காக வசூல் செய்துள்ளது புஷ்பா 2.

வரும் நாட்களில் மேலும், டிக்கெட்டுகள் விற்பனை அதிகரிக்கலாம். முதல் நாளில் அமெரிக்காவில் மட்டுமே ரூ. 40 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்புகள் உள்ளதாகவும், ஓவர்சீஸில் மெகா வசூல் வேட்டையை நடத்தும்’ என்றும் கூறுகின்றனர்.

ஆக, வங்கக் கடலில் உருவான பெங்கால் புயலால் பொழியும் மழையை விட, புஷபாவின் வசூல் மழை தெறிக்கும் போல.!