விஜய் டிவி ரியாலிட்டி ஷோவில் களமிறங்கும் ரம்பா.. சூப்பர் அப்டேட் இதோ..!
விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோவில் களமிறங்க உள்ளார் ரம்பா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் சீரியல்கள் ரியாலிட்டி ஷோக்கள் என இரண்டுக்குமே ரசிகர்கள் மிகவும் அதிகம். அதிலும் தற்போது நடன நிகழ்ச்சி குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஜோடி ஆர் யூ ரெடி என்ற நடன நிகழ்ச்சி முதல் சீசன் நடந்தது முடிந்தது. அதனைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது தொடங்க உள்ளது. இந்த நடன நிகழ்ச்சிக்கான தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே.
அதில் கடந்த சீசனில் ஜட்ஜ் ஆக மீனா,சாண்டி மாஸ்டர், மற்றும் ஸ்ரீதேவி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது மீனாவிற்கு பதிலாக ரம்பா நடுவராக பங்கேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது