சௌந்தர்யா எனக்கு தோழி தான்,ஆனால்? காதல் குறித்து மனம் திறந்த விஷ்ணு..!
சௌந்தர்யாவின் காதல் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் விஷ்ணு.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து தற்போது எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது டைட்டிலை யார் வெல்லுவார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது.
இந்த சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் சௌந்தர்யா. இவருக்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது மட்டுமில்லாமல் சௌந்தர்யா டைட்டில் வின்னர் ஆகவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் ஃபிரண்ட்ஸ் அண்ட் ஃபேமிலி ரவுண்டு நடந்தது அதில் சௌந்தர்யாவின் நெருங்கிய நண்பராக கடந்த சீசன் போட்டியாளர் விஷ்ணு வந்திருந்தார். சௌந்தர்யா ஒரு தட்டில் மேரீ மீ என்று எழுதி ப்ரபோஸ் செய்திருந்தார். விஷ்ணுவும் சம்மதித்து வாங்கிக் கொண்டார். பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு விஷ்ணு இதைப் பற்றி எதுவும் பேசாமல் இருந்த நிலையில் தற்போது மனம் திறந்துள்ளார்.
சௌந்தர்யாவின் காதல் குறித்து விஷ்ணு பேசுகையில் நாங்கள் முதலில் நண்பர்களாகத்தான் இருந்தோம் நான் நண்பனாகத்தான் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றேன் ஆனால் அதற்கு பிறகு நடந்தது எல்லாமே எதிர்பாராதது இதையும் சிலர் ஸ்கிரிப்ட் என்று சொல்லுவார்கள் ஆனால் நாங்கள் காதலிக்கிறோம் இப்போதுதான் வெளிப்படையாக கூறியுள்ளோம் என்று சொல்லி உள்ளார்.
இது மட்டுமல்லாமல் காதலர்களாக கொஞ்ச நாள் வாழ்க்கையை என்ஜாய் செய்துவிட்டு விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதிலால் ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.