Ram Gopal Varma

Ram Gopal Varma : 2.ஓ ஒரு படமா? குழந்தைகள் பார்க்கும் படம் என ட்வீட் செய்து ஷங்கரை கலாய்த்துள்ளார் சூர்யாவின் ரத்த சரித்திரம் படத்தின் இயக்குனர்.

பாலிவுட் இயக்குனர்களில் பிரபலமானவரும் சர்ச்சையான இயக்குனர் என்றால் அது ராம் கோபால் வர்மா தான். எப்போதும் பிரபலமானவர்களை வம்பிழுத்து வருவது இவரது வழக்கம்.

தற்போதும் அப்படி தான் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரை வம்பிழுத்து ட்வீட் செய்துள்ளார். அதாவது 2.ஓ குழந்தைகள் பார்க்கும் படம்.

ஷங்கர் குழந்தைகளுக்கான படத்தை எடுத்துள்ளார். இளம் இயக்குனர் பைரவா கீதா என்ற இளைஞர்கள் பார்க்க வேண்டிய படத்தை எடுத்துள்ளார் என கூறியுள்ளார்.

இந்த பைரவா கீதா படம் 2 பாயிண்ட் ஓ படம் ரிலீசாகும் நவம்பர் 29-ம் தேதி தான் வெளியாக உள்ளது. இதனால் தான் ராம் கோபால் வர்மா இப்படியான டீவீட்டை பதிவிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.