Raju About Meet With Thalapathy

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் விஜயை சந்தித்தது குறித்து பேசியுள்ளார் ராஜூ‌.

Raju About Meet With Thalapathy : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் ராஜூ. பிக் பாஸ் டைட்டிலையும் இவர் தான் வென்றார்.

இவர் வீடியோ கால் வழியாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் விஜயை சந்தித்ததாக கூறியுள்ளார்.

வரலாற்றில் முதல் முறையாக, பொற்றாமரைக் குளத்தை வலம் வந்த இறைவன்-இறைவி

விஜய் சார் என்னை பார்த்து புதுசா என கேட்டார். நான் நெல்சனுடன் பணியாற்றி உள்ளேன் என கூறினேன். அவர் என்னுடைய கண்கள் அழகாக இருப்பதாக சொன்னார். சிறு வயதில் இருந்து விஜய்க்காக சேகரித்து வைத்த புக்கை அவரிடம் கொடுத்தேன். ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார்.

இந்த சந்திப்பு பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு 15 நாட்கள் இருக்கும் போது நடந்தது என கூறியுள்ளார்.

Dhanush & Aishwarya Divorce💔 – தனுஷ் மேனேஜர் Subramaniam Siva கருத்து | HD