ரஜினியுடன் ‘டிராகன்’ பட இயக்குனர் அஷ்வத் சந்திப்பு; செம ஹேப்பி..
சூப்பர் ஸ்டார் அழைப்பின் பேரில், அவரது இல்லத்தில் அஷ்வத் சந்தித்து மகிழ்ந்துள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்..
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வெளியான ‘டிராகன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம், திரையரங்குகளில் ரூ.100 கோடிக்கு மேலான வசூலை நோக்கி விறுவிறுக்கிறது. இச்சூழலில் ‘டிராகன்’ படத்தை பார்த்திருக்கிறார் ரஜினிகாந்த்.
படம் சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் பிடித்துப் போனதால், அப்படத்தின் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவை தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து தன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ரஜினியை சந்தித்தபோது, ‘என்ன அஷ்வத்.. இப்படி எழுதியிருக்க, ஃபெண்டாஸ்டிக்.. ஃபெண்டாஸ்டிக்’ என சிலாகித்து வாழ்த்தினாராம்.
‘நல்ல படம் பண்ணனும், படத்தை பார்த்து ரஜினி சார் வீட்டுக்கு கூப்பிட்டு பாராட்டனும். அவர் நம்ம படத்தை பற்றிப் பேச வேண்டும்’ – என்பது.. இயக்குனராக வேண்டும் என்று கஷ்டப்பட்டு உழைக்கின்ற ஒவ்வொரு உதவி இயக்குனரின் கனவு. என்னுடைய கனவு நிறைவேறிய நாள் இன்று’ என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் அஷ்வத்.
வழக்கமாக இதுபோன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர்களிடம் ரஜினி, கதை கேட்பதுண்டு. அதேபோல் அஷ்வத்திடமும் கதை கேட்டிருக்கக் கூடும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
முன்னதாக ‘லவ் டுடே’ படம் ரிலீஸாகி வெற்றி பெற்றபோது பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து வாழ்த்திய ரஜினி, தற்போது அவரின் ‘டிராகன்’ படத்தை பார்த்து இம்பிரஸ் ஆகி வாழ்த்தி இருக்கிறார். இதனால் ‘டிராகன்’ படக்குழுவினர் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.
அஷ்வத்தும் சூப்பர் ஸ்டாருக்கு ஏற்ப ஒரு கதை தயார் செய்வது மேலும் சிறப்பு. ஏற்கனவே, மணிரத்னம், மாரிசெல்வராஜ், வெற்றிமாறன் மற்றும் இவர்களுடன் அஷ்வத் என இருக்கட்டும். முடிவு, தலைவர் கையில்..! என இணையவாசிகளின் ஆர்வம் வைரலாகி வருகிறது.
