Rajinikanth Political Party Opening

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கட்சி அறிமுக விழா எங்கு நடைபெற உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Rajinikanth Political Party Opening : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடங்களாக அரசியலுக்கு வருவேன் என கூறி வருகிறார். ஆனால் அது வெறும் பேச்சாக மட்டுமே இருந்து வந்த நிலையில் இந்த வருடம் அரசியலில் நுழைவது உறுதி என அறிவித்துள்ளார்.

தன்னுடைய புதிய கட்சி அறிவிப்பு காண தேதி டிசம்பர் 31 வெளியாகும் என ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். மேலும் கட்சியின் தொடக்கம் ஜனவரி மாதத்தில் இருக்கும் எனவும் அறிவித்து இருந்தார்.

இப்படியான நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கட்சி அறிமுக விழா மதுரையில் நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதே மதுரையில்தான் கடந்த 2005ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் தன்னுடைய புதிய கட்சியை அறிவித்தார்.

அதேபோல் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களும் தன்னுடைய மக்கள் நீதி மையம் கட்சியை மதுரையில் தான் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதே பாணியில் தன்னுடைய கட்சியை மதுரையில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.