ரஜினியின் ‘தலைவர்-173’ படம் துவங்குவதில் சிக்கல்?

Web Ads

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார் என அறிவிக்கப்பட்டது. இச்சூழலில் ‘தலைவர்-173’ படம் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்..

கடந்த 2022-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ மூலமாக இயக்குனராக அறிமுகமானார் சிபி சக்கரவர்த்தி. இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ. 100 அளவுக்கு வசூலை குவித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் எஸ்கே நடிப்பில் சிபி படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் தயாரிப்பில் இப்படம் உருவாவதற்கான வேலைகளும் நடந்தன.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தலைவர் 173 இயக்கும் வாய்ப்பை பெற்றார் சிபி சக்கரவர்த்தி. இதனால் எஸ்கேவுடன் அவர் இணைவதாக கூறப்பட்ட படம் தள்ளிப்போயுள்ளது.

இதனிடையில் ரஜினியின் படத்தினை துவங்குவதற்கு சிபி சக்கரவர்த்தி பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் தரப்பில் இருந்து என்ஓசி எனப்படும் அனுமதி சான்றிதழ் வாங்க வேண்டும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளர் தரப்புக்கு அடுத்ததாக எஸ்கேவின் படத்தை இயக்குவேன் என்றும் எப்போது துவங்கி படம் முடிக்கப்படும் என்பதற்கான உறுதியையும் சிபி சக்கவர்த்தி அளித்தால் மட்டுமே சுதன் என்ஓசி வழங்குவார் எனவும் கூறப்படுகிறது. இதனால் ‘தலைவர் 173’ படத்தினை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக கொச்சி சென்றுள்ளார். இதனையடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார். அதற்குள் என்ஓசி பெற்று விடுவார் சிபி என எதிர்பார்க்கப்படுகிறது. ஆம், இதெல்லாம் ஒரு சிக்கலா?

rajinikanth in thalaivar 173 movie update
rajinikanth in thalaivar 173 movie update