ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர்-2 படத்தின் அப்டேட்ஸ்..

ரஜினி நடிக்கும் ஜெயிலர்-2 படத்தின் தகவல்கள் காண்போம்..

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெற்றி பெற்றது ஜெயிலர் திரைப்படம். இப்படத்தில், ரஜினி முத்துவேல் பாண்டியன் என்கிற மாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம், உலகளவில் 650 கோடிக்கும் மேல் வசூலித்தது.

இதனைத் தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கியது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பாலக்காடு அட்டப்பாடியில் நடைபெற்றது. அங்கு ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இப்படத்தில், ரஜினிகாந்த் உடன் ரம்யா கிருஷ்ணன், மிர்னா, பகத் பாசில், சிவராஜ்குமார், மோகன்லால் என பிரபலங்கள் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்காக ரஜினி வாங்கிய சம்பளம் 260 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் விஜய்யை நெருங்கி உள்ளார் ரஜினி. தற்போது விஜய் ரூ.275 கோடி சம்பளம் வாங்கி முதலிடத்தில் உள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாகத்தைப் போலவே அதன் இரண்டாம் பாகமும் அதிரடி காட்சிகளால் நிறைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் 2-ம் பாகத்தில் மாத்யூ என்ற டான் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க உள்ளார் என்பது அண்மையில் உறுதியானது.

rajinikanth got huge salary for jailer 2 movie
rajinikanth got huge salary for jailer 2 movie