வனிதா விஜயகுமார் நடிக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட ரஜினிகாந்த்..!

Web Ads

வனிதா விஜயகுமார் நடிக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தின் ரிலீஸ் தேதியை ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ளார்.

Rajinikanth announced the release date of Vanitha Vijayakumar starrer Mr. and Mrs..!
Rajinikanth announced the release date of Vanitha Vijayakumar starrer Mr. and Mrs..!

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். ஆரம்பத்தில் படங்கள் நடித்திருந்தாலும் பிறகு சினிமாவில் காணாமல் போகி இருந்தார் என்றே சொல்லலாம்.

பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.இந்த நிலையில் வனிதாவே இயக்கி நடித்துள்ள திரைப்படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இந்தத் திரைப்படத்தை இவரது மகள் ஜோவிகா தயாரித்து உள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அதாவது இந்த திரைப்படம் வருகிற ஜூலை மாதம் நான்காம் தேதி வெளியாக உள்ளதாக அறிவித்து உள்ளனர்.

இதனை வனிதா விஜயகுமார் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vanitha (@vanithavijaykumar)