விரைவில் முடிவுக்கு வரப்போகும் விஜய் டிவியின் பிரபல சீரியல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
விஜய் டிவியின் பிரபல சீரியல் ஒன்று முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தங்க மகள். மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
ஏற்கனவே கடந்த வாரம் பொன்னி சீரியல் முடிவுக்கு வந்தது அதற்கு பதிலாக தென்றலே மெல்ல பேசு என்ற புத்தம் புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் தங்கமகள் சீரியலும் விரைவில் முடிவுக்கு வரப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே பொன்னி சீரியலை மிஸ் பண்ணுவதாக ரசிகர்கள் சொல்லிவரும் நிலையில் இந்த சீரியலின் முடிவும் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
