ரவிமோகன் தயாரித்து நடிக்கும் ‘ப்ரோகோட்’ படம் பற்றி அப்டேட்ஸ்
‘ப்ரோகோட்’ படம் பற்றிய தகவல்கள் காண்போம்..
ரவிமோகன் நடித்த ‘ஜீனி’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதனிடையே சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன் வில்லனாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து ரவிமோகன் கதையின் நாயகனாக ‘ப்ரோகோட்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ரவி மோகன் ஸ்டுடியோஸ் சார்பில் அவரே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘டிக்கிலோனா’, ‘வடக்குப் பட்டி ராமசாமி’ படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கும் இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நான்கு முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்கிறார். ஹர்ஷவர்தன் இசையமைக்கிறார்.
நகைச்சுவையுடன் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாக உருவாகும் இந்தப் படம் பற்றி கார்த்திக் யோகி கூறும்போது, ‘இதன் கதையை ரவி மோகனிடம் விவரித்தபோது மிகவும் ரசித்தார். படத்தைத் தயாரிக்கவும் முன்வந்தார். இதில் ‘ஸ்லாப்ஸ்டிக்’ பாணியிலான நகைச்சுவை காட்சிகள் இடம் பெறும். இந்தப் படம் வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும்’ என்றார். மேலும், யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் படத்தை ரவிமோகன் இயக்கவுள்ளார்.