‘கண்ணப்பா’ படம் பார்த்து, மோகன்பாபு- மஞ்சு விஷ்ணுவுக்கு ரஜினிகாந்த் பாராட்டு..

Web Ads

‘கண்ணப்பா’ படம் பார்த்த ரஜினிகாந்த் ‘ரொம்ப பிடிச்சிருக்கு’ என தெரிவித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன் பாபு இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது தெரிந்ததே. இந்நிலையில் வெளியான ‘கண்ணப்பா’ படத்தின் டிரெய்லர் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், ரஜினிகாந்துக்கு மோகன்பாபு இப்படத்தை திரையிட்டுக் காட்டியுள்ளார்.
படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் படத்தையும், மஞ்சு விஷ்ணுவின் நடிப்பையும் அவர் பாராட்டியதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து வலைதளங்களில் அவர் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். ‘கண்ணப்பா’ படத்தை ரஜினிகாந்த் பார்த்தார். படத்தைப் பார்த்த பிறகு என்னை இறுக்கி அணைத்துக் கொண்டார்.

‘கண்ணப்பா’ ரொம்பப் பிடிச்சிருக்குன்னு சொன்னார். இந்த தருணத்துக்காக நான் கடந்த 22 வருஷமா காத்திருக்கேன். என் நடிப்பை எப்போ பாராட்டுவார். இப்படி எப்போ அணைச்சுப்பார்னு நினைச்சுட்டிருந்தேன். அந்தக் கனவு இப்போ நிறைவேறிடுச்சு. இன்னைக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா, பெருமையா இருக்கு’ என மஞ்சு விஷ்ணு கூறியுள்ளார்.

Web Ad 2

முன்னதாக ரஜினிகாந்த், மோகன்பாபு இணைந்து நடித்த ‘பேட்டராயுடு’ படம் 1995 ஜூன் 15 அன்று வெளியானது. மோகன் பாபுவின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த இப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்தன.

இந்த சிறப்புச் சந்தர்ப்பத்தை முன்னிட்டு மோகன் பாபு, ரஜினிகாந்த் சந்தித்தனர். அன்றைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்த சமயத்தில்தான் ரஜினிகாந்த் ‘கண்ணப்பா’வைப் பார்த்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மோகன்பாபு ‘ஜூன் 15 அன்று ‘பேட்டராயுடு’ வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்தன. அதே நாளில் என் அன்பு நண்பர் ரஜினிகாந்த் ‘கண்ணப்பா’ படத்தைப் தனது குடும்பத்தினருடன் பார்த்தார். பிறகு அவர் அளித்த அன்பு, பாராட்டு, ஊக்கம் எப்போதும் மறக்க முடியாதது. நன்றி நண்பா’ என கூறியுள்ளார். முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ள ‘கண்ணப்பா’ இந்த மாதம் 27-ந்தேதி ரிலீஸாகிறது. சிவ பக்தரின் கதையை இப்படம் விவரிக்கிறது.

Kannappa movie excellent in rajini speech and mohanbabu happy