கடைக்குப் போன சரவணனுக்கு அர்ச்சனா செய்து திருட்டு வேலை தெரியவந்துள்ளது.

Raja Rani2 Episode Update 06.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் ஊருக்கு வந்த சரவணன் சந்தியாவை ரூமுக்குள் அழைத்துச் சென்று அவரை கண்ணை மூட சொல்கிறார். சந்தியா எதுக்கு என்ன என சத்தம் போட அவர் சத்தம் போடாதீங்க என அமைதியாக இருக்க சொல்கிறார்.

கடைக்குப் போன சரவணனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. அம்பலமான அர்ச்சனாவின் வில்லத்தனம் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோடு அப்டேட்

பிறகு சந்தியா கண்களை மூடியதும் தான் வாங்கிய மெடலை கழுத்தில் போட்டு அழகு பார்க்கிறார். நான் போட்டியில் ஜெயித்ததற்கு காரணமே நீங்கதான். இதை இங்கேயே செய்யணும் நினைச்சேன் ஆனால் யாராவது ஒருத்தர் கூடவே இருந்ததால் செய்ய முடியல என கூறுகிறார். பிறகு சந்தியாவுக்கு சரவணனுக்கும் இடையே ரொமான்ஸ் நடக்கிறது. சந்தியா இப்போ கடைக்கு கிளம்புங்க, எதுவாக இருந்தாலும் நைட் பேசிக்கலாம் என அனுப்பி வைக்கிறார்.

பிறகு கடைக்கு வந்த சரவணனை அங்கிருந்த சிலர் பாராட்டினர். அதன்பிறகு சரவணன் வியாபாரம் பற்றி கேட்க இருவரும் திருதிருவென முழிக்க என்றனர். என்னன்னு யாராவது ஒருத்தர் சொல்லுங்க என கேட்டது அர்ச்சனா செய்த வேலைகளை சொல்ல அவர் அதிர்ச்சி அடைகிறார். பிறகு சரி நம்ம வீட்டு ஆள் தானே ஒன்னும் பிரச்சனை இல்ல விடுங்க என கூறுகிறார். இத பத்தி வேற யார்கிட்டயும் சொல்லாதீங்க என கூறுகிறார்.

கடைக்குப் போன சரவணனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. அம்பலமான அர்ச்சனாவின் வில்லத்தனம் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோடு அப்டேட்

இந்தப் பக்கம் அர்ச்சனா பயங்கர கடுப்பில் இருக்கிறார். அப்படியே என்ன நோபல் பரிசு ஜெயித்துவிட்டார். மாலை மரியாதை கட்ட விட்டுவிட்டு ரொம்பதான் பண்றாங்க என புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் செந்தில் உள்ளே வர அவரிடம் கோபத்தைக் காட்டுகிறார்.

பிறகு ஆதியும் பார்வதியும் வழக்கம்போல் சரவணனே வைத்து சண்டை போட்டுக் கொண்டிருக்க அதன்பிறகு அங்கு வந்த சிவகாமி எங்கே சந்தியாவையும் அர்ச்சனாவை காணவில்லை என கேட்கிறார். பிறகு இருவரும் வந்துவிட அர்ச்சனாவிடம் சாப்பாடு ரெடியா செந்திலும் சரவணனும் இன்னும் வரலையா என கேட்கிறார்.

சரவணன் இப்போ வந்து விடுவார் என சந்தியா சொல்ல அர்ச்சனா அவரும் வந்து விடுவார் குடோனில் இருக்கிறார் என கூறுகிறார். பிறகு சரவணன் வந்ததும் அவருடைய அப்பா வியாபாரம் பற்றி கேட்க சரவணன் முகம் மாறுகிறது. இதனால் சந்தியா என்னாச்சு ஏன் இவர் முகம் மாறுகிறது என யோசிக்கிறார். அர்ச்சனா ஒருபக்கம் திருதிருவென முழிக்கிறார். அதெல்லாம் எப்பயும் போல நல்லபடியா தான் நடந்திருக்கும் என சிவகாமி செல்ல சரவணனும் ஆமாம் என தலையாட்டுகிறார்.

பிறகு போட்டியில் கலந்துகொண்ட ஹேனா நம்ம வீட்டுக்கு வருவதாக சொன்னார்கள் என சரவணன் சொல்கிறார். சிவகாமி அவங்க எதுக்கு வர்றாங்க சரவணன் எப்படி சமைக்கிறாங்க பார்த்துட்டு போங்க வராங்களா எனக் கேட்க சந்தியா அவங்க ரொம்ப நல்ல கேரக்டர் என கூறுகிறார். பார்வதியும் அவங்களை சரவணன் அண்ணா ஜெயிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டாங்க என கூறுகிறார்.

அதன்பிறகு சரவணனின் அப்பா அந்த பொண்ணு வந்ததும் ஆரஞ்சு ஜூஸ் எப்படி செய்வது என்று கேட்டு தெரிந்து கொண்டு எனது வீட்டில் உள்ள அனைவரும் சிரிக்கின்றனர். அதாவது சிவகாமி ஆரஞ்சு ஜூஸ் என நினைத்து குடித்துவிட்டு பேசியதை நினைத்து பார்த்து தான் அனைவரும் சிரிக்கின்றனர். சிவகாமி எதுக்கு எல்லோரும் சிரிக்கிறீங்க என சொல்லியும் எல்லோரும் சிரிக்க நான் போய் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என சொல்லிவிட்டு செல்கிறார்.

பிறகு அனைவரும் சாப்பிட சென்றுவிட அர்ச்சனா அத்தை குடித்தது அவர்களுக்கு தெரியக்கூடாது என்றுதானே நினைக்கிறீங்க நான் தெரியப்படுத்துகிறேன் என சொல்லிக் கொள்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிகிறது.