ஜெஸ்ஸிக்கு உதவ மறுத்துள்ளார் சந்தியா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சரவணன் ஸ்டேஷனுக்கு வந்து சந்தியாவிடம் பியூட்டி பார்லர் பற்றி ஏதாவது உங்களால் உதவி செய்ய முடியுமா என கேட்க சந்தியா சொந்த விஷயத்துக்காக அதிகாரத்தை பயன்படுத்த முடியாது என மறுப்பு தெரிவிக்கிறார்.

அதன் பிறகு வீட்டில் ஜெஸ்ஸியின் அப்பா அம்மா வந்து இந்த பிரச்சனை பற்றி பேசிக்கொண்டிருக்க அப்போது சரவணன் வர சந்தியா என்ன சொன்னா என கேட்க சரவணன் இன்னும் பேசவில்லை என சொல்ல சிவகாமி கோபப்படுகிறார். ஜெஸ்ஸி சந்தியா சொந்த விஷயத்துக்காக அதிகாரத்தை பயன்படுத்த முடியாதுன்னு சொல்லி இருப்பார் என்பதை கண்டுபிடித்து பேச சரவணன் திரும்பவும் நான் சந்தியா கிட்ட பேசுறேன் என சொல்கிறார்.

ஆனால் ஜெஸ்ஸியின் அப்பா அம்மா வேண்டாம் இந்த விஷயத்தை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என சொல்லி அங்கிருந்து கிளம்பி செல்கின்றனர். பிறகு சிவகாமி பியூட்டி பார்லர் அருகே நின்று புலம்பிக் கொண்டிருக்க அங்கு வரும் கவிதா நல்லவன் போல சிவகாமியிடம் மன்னிப்பு கேட்டு இந்த பிரச்சனையை நான் தீர்த்து வைக்கிறேன் என சொல்கிறார்.

அடுத்து கான்ஸ்டபிள் தங்கம் பியூட்டி பார்லர் பிரச்சனை குறித்து விசாரிக்க கவிதாவின் வேலை தான் என தெரிய வருகிறது‌. இந்த விஷயத்தை சந்தியாவிடம் சொல்ல பிறகு சந்தியா சரவணனுக்கு போன் போட்டு ஒரு லாயரைப் பார்த்து இத சரி செய்யலாம். அதில் ஏதாவது பிரச்சனை வந்தால் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்ல சரவணன் சரியென கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.