பாடகராக அவதாரம் எடுத்துள்ளார் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்.

Public Star As Singer : தமிழ் சினிமாவில் தப்பாட்டம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் துரை சுதாகர். பப்ளிக் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் அடுத்ததாக விமல் நடிப்பில் வெளியான களவாணி 2 திரைப்படத்தில் முரட்டு வில்லனாக நடித்திருந்தார்.

தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வந்த துரை சுதாகர் தற்போது பாடகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். நான் ஒரு முட்டாள் என்ற படத்தில் குடிமகன் என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை வைத்து குடிகாரர்களுக்கு சமர்ப்பணம் செய்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த திரைப்படத்திற்கு ஏ ஜே அலி மிர்ஸாக் என்பவர் இசையமைத்துள்ளார். பாடல் காட்சிகள் தஞ்சாவூரில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.