Web Ads

சூரி நடிக்கும் படங்களின் வெற்றிக்கு காரணம்: தயாரிப்பாளர் கே.ராஜன் விளக்கம்..

நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ படத்தின் மூலம் ஹீரோவானவர் சூரி என்பது தெரிந்ததே.

இந்நிலையில், ‘மாமன்’ படத்தை தொடர்ந்து, சூரியின் நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை, மண்டாடி ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. இரண்டு படங்களுமே அவருக்கு பெரிய பெயரை பெற்றுத்தரும் என கருதப்படுகிறது.

இந்நிலையில் சூரி குறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் ‘கயிலன்’ பட விழாவில் தெரிவிக்கையில், ‘இப்போது வரும் இயக்குநர்களின் சிந்தனை நன்றாக இருக்கிறது. அதேசமயம் அதிக செலவை தயாரிப்பாளர்களுக்கு வைத்து விடுகிறார்கள். சூரி என்ன பெரிய அழகா? காமெடி ரோல் செய்துகொண்டிருந்தார்.

இப்போது ஹீரோவாக வரிசையாக நான்கு முதல் ஐந்து படங்கள்வரை சக்சஸ் கொடுத்துவிட்டார். அவரது படங்களில் கிளாமர், வல்கர் போன்ற எந்த சமாசாரமும் இல்லை. அதனால்தான், அவரது படங்களை குடும்பத்தினர் ரசிக்கிறார்கள். படமும் ஓடுகிறது’ என்றார்.

producer k rajan open talks about soori here are full details
producer k rajan open talks about soori here are full details