காயத்ரி ரகுராம் கண்கள் கலங்கி உருக்கமான பேச்சு..
காயத்ரி ரகுராம் 2006-ம் ஆண்டு தீபக் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் 2010-ம் ஆண்டு விவாகாரத்து பெற்று பிரிந்தார்.
இவரின் தந்தை ரகுராம் மாஸ்டர் 2013-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி தனது 64 வயதில் காலமானார். இந்நிலையில, தனது அப்பா குறித்து காயத்ரி ரகுராம் உருக்கமாக தெரிவிக்கையில்,
‘வை ராஜா வை படத்துக்காக ஜப்பானில் ஷூட்டிங்கில் இருக்கிறேன். அப்போதான் அப்பா இறந்துவிட்டார் என்கிற மெசேஜ் வந்தது. உடனே அங்கிருந்து வந்து அவரை கட்டி அணைத்துக் கொண்டு என்னை விட்டு போயிடாதீங்க என கதறி அழுதேன்.
அதற்கு முன்னதாக உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது, என் பெயரை கூட மறந்துவிட்டார். ஆனால், ரெண்டாவதை கூப்பிடு என சொல்லி என்னை அழைத்து, நான் இன்னும் எத்தனை நாள் பயணிப்பேன் என தெரியல, யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிச்சிடுங்க என்றார்.
எப்போதும் என் அப்பா என் கூடவே இருக்க வேண்டும் என்பதற்காக, எனக்கு விவகாரத்து ஆன பிறகு என் அப்பா பெயரை கெசட்டில் சேர்த்து விட்டேன். எப்போதுமே காயத்ரி ரகுராம் தான் நான், நானிருக்கும் வரை அவரும் என்னோடு இருப்பார் என்று கண்கள் கலங்கினார்’. இந்நிகழ்வுக்கு இணையவாசிகள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
