YouTube video

Producer And Actor Rana Daggubati – Miheeka Bajaj Got Married

Hanshika Latest Photoshoot Photos : துருதுரு நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த லாக்டோன் காலகட்டத்தில் உடற்பயிற்சிகள் மூலம் தனது உடலை குறைத்து, புசுபுசுன்னு இருந்த ஹன்சிகா இப்போ குயினாக மாறியுள்ளார். அவ்வப்போது இணையதளத்தில் தன்னுடைய கவர்ச்சிகரமான போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு, தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இதுவரை 49 படங்களை நடித்துவிட்டு தனது 50-வது படமான மஹா படத்தை தேர்வு செய்து அதில் கச்சிதமாக நடித்து வருகிறார்.

தற்போது இருட்டில் முகம் தெரியும் அளவிற்கு மின்மினிப்பூச்சி போன்று காட்சியளிக்கும் டிராகன் போஸ் கொடுத்து ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவில், ஜொலிஜொலிக்கும் உடையில், பார்க்க கடல்கன்னி போல மின்னும் அழகில் ஒரு இருட்டு அறையில், சிறிய மின் விளக்கு வெளிச்சத்தில், பளீரென தெரியும் பளபளப்பான தேகத்தை காட்டியவாறு மயக்கும் மந்திர பார்வையால் பல்வேறு வித்தியாசமான கோணங்களில் எடுக்கப்பட்டுள்ள இந்த ட்ராகன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்தவர்கள் வித்தியாசமாக இருக்கும் இந்த போட்டோவை மெய் மறந்து பார்த்து, அதனை பலருக்கு ஷேர் செய்தும் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.