கலக்கலான காமெடியுடன் பிரின்ஸ் திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ள ‘டான்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘பிரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், வெளிநாட்டு நடிகை மரியா ரியான்ஷாப்கா ஆகியோர் நடித்துள்ளனர்.

மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை சுரேஷ் மற்றும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் தமன் இசையில் வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் பிரின்ஸ் திரைப்படம் வரும் அக்டோபர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 9ஆம் தேதியான நேற்று இரவு 8 மணிக்கு வெளியாகி உள்ளது. இந்த பிரின்ஸ் திரைப்படத்தின் டிரைலரும் சிவகார்த்திகேயனின் மற்ற திரைப்படங்களைப் போல் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகி இருக்கிறது. இதனால் இப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது.