குடிப்பழக்கத்தை விட்டு விட்டதாக கூறிய நிலையில் பிரேம்ஜி பதிவு செய்த ரியாக்சன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Premji Reaction to Simbu Speech : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மாநாடு படத்தில் இருந்து முதல் சிங்கிள் ட்ராக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனையடுத்து மாநாடு படக்குழுவினருடன் ட்விட்டர் ஸ்பேஸ் லைவில் வந்தார் நடிகர் சிம்பு. அப்போது ரசிகர் கேட்ட கேள்விக்கு தான் மது அருந்துவதை விட்டு ஒரு வருடமாவதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் பிரேம்ஜி போன்ற ஒருவரை நண்பராக வைத்துக்கொண்டு குடிக்காமல் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அணியின் நடத்தை பிடிக்காததால், முன்னாள் கேப்டன் பதவி விலகல்

இதற்கு பிரேம்ஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரியாக்சன் கொடுத்து ஒரு மீம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பிரேம்ஜி அமரன் அப்பா கங்கை அமரன் அவருக்கு இப்போதுதான் பின் தேடுவதாக கூறிய நிலையில் இன்று இவ்வாறு கூறியதை பார்த்த ரசிகர்கள் கடைசி வரைக்கும் நீங்க முரட்டு சிங்கள் தான் என பிரேம்ஜியை கலாய்த்து வருகின்றனர்.

Beast படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு – வெளியான Massive Update | Thalapathy Vijay | Nelson | HD