
முதல் முறையாக காதலனின் போட்டோவை வெளியிட்டுள்ளார் நடிகை இலியானா.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் இலியானா. தமிழில் கேடி மற்றும் நண்பன் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ள இவர் தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்து வந்தார்.

அதன் பிறகு பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்க அங்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாமல் போக உடல் எடை கூடி குண்டானார். மேலும் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமான இவர் தற்போது ஒன்பது மாதம் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.
ஆனால் இதுவரை தன்னுடைய காதலன் யார் என்று போட்டோக்களை வெளியிடாமல் இருந்து வந்த நிலையில் முதல் முறையாக அவருடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
