பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிக்க உள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

Prakash Rajesh Joins With AjithKumar : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் இணையும் பிரபல நடிகர்.. அஜித் 61 படம் பற்றி வெளியான அசத்தல் அப்டேட்

ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அஜித்தின் 61 வது படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தபு நடிக்க உள்ளார் என தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் இணையும் பிரபல நடிகர்.. அஜித் 61 படம் பற்றி வெளியான அசத்தல் அப்டேட்

இதற்கு முன்னதாக பிரகாஷ்ராஜ் அஜித்துடன் இணைந்து ஆசை, பரமசிவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.